திருவிவிலியம் ஓர் அணையா விளக்கு
- பில்லி கிரஹாம்
(This article translated from the book, ‘Day by Day’ with Billy Graham)
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்.
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.
மத்தேயு 24:35
காலம் கரைந்து கொண்டிருக்கிறது.
நள்ளிரவை நோக்கி வினாடி முட்கள் துடிதுடித்துக் ஓடிக் கொண்டிருக்கிறது.
மனிதயினம் மிக விரைவில் மரணக்குழியில் விழப்போகின்றது.
எந்தப் பக்கம் நாம் திரும்பலாம்?
இன்னும் ஏதாவது செல்வாக்கு மிச்சம் இருக்கிறதா?
நாம் பின்தொடர்ந்து செல்வதற்கு ஏதாவது பாதை இருக்கிறதா?
நம்முடைய இந்த கடினமான குழப்பநிலையில் சரியான பதிலை தரக்கூடிய இரகசிய புத்தகத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா?
நாம் திரும்பிச்செல்ல வழிகாட்ட கூடிய ஒரு நம்பகமான ஆளுமை இருக்கிறதா?
ஒருவேளை, நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம், நாம் எங்கு சென்றுக் கொண்டிருக்கிறோம், என்பதை குறித்து எவ்வித குறிப்பும் இல்லாத நிலையில், நமக்கு தெரியாத ஒரு கடவுளாலோ அல்லது ஒரு சக்தியாலோ, நாம் இங்கே சும்மா விடப்பட்டிருக்கின்றோமா?
அதற்கு பதில் “இல்லை”.
நமக்கு ஒரு ரகசியங்களை சொல்லும் புத்தகம் இருக்கிறது. நம்மிடம் ஒரு வழிக்காட்டி இருக்கிறது. நம்மிடம் நம்பிக்கைக்குரிய ஆளுமைகொண்ட மூலப்பொருள் இருக்கிறது.
அது எங்கிருக்கிறது தெரியுமா? நாம் பைபிள் என்று அழைக்கும் அந்த பழமையான வரலாற்று புத்தகத்தில் தான் நாம் அதை கண்டுபிடிக்க இயலும்.
பல யுகங்கள் கடந்து இப்புத்தகம் நம்மை வந்தடைந்திருக்கிறது.
எத்தனையோ பல கைகளை கடந்து, எத்தனையோ பலவித வடிவங்களில் தோன்றி, எல்லாவிதமான தாக்குதல்கலிருந்தும் பிழைத்து அது வந்திருக்கிறது.
காட்டுமிராண்டித்தமான நாசவேலைகளாலும் நவநாகரிக மேதைமைகளாலும் அதை ஒழிக்க முடியவில்லை.
நெருப்பால் அதை அழிக்க முடியவில்லை; நம்பாதவர்களின் நையாண்டி சிரிப்பால் அதை நிர்மூலமாக்க முடியவில்லை.
மனிதனின் இருண்ட யுகங்களை தாண்டியும் அதன் ஒளிமயமான வாக்குறுதிகள் இன்றும் கறைபடாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment